- மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம்
- சில பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில்
தற்போது நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குடிநீருக்கான நீரேந்து பகுதிகளில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், குடிநீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
எனவே தற்போதைய சூழ்நிலையில், நுகர்வோரின் குடிநீர் தேவைகளை 24 மணி நேரமும் தொடர்ச்சியாக பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என, சபை அறிவித்துள்ளது.
எனவே, உயரமான பிரதேசங்களில் உள்ள நுகர்வோருக்கு நீர் விநியோகத்தில் குறைந்த அழுத்த நிலை ஏற்படக்கூடும் என, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Add new comment