21ஆவது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெனிய நியமனம்

21ஆவது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெனிய நியமனம்-Thushara Upuldeniya Appointed as Commissioner General of Prisons

இலங்கையின் 21ஆவது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக, துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதியமைச்சர் அலி சப்ரியினால் அவரது நிரந்தர நியமனம் தொடர்பான நியமனக் கடிதம் இன்று (19) பிற்பகல், நீதியமைச்சில் வழங்கப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 08ஆம் திகதி முதல் பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றி வரும் அவரை, ஆணையாளர் நாயகமாக நியமிப்பதற்கான அனுமதியை அண்மையில் அமைச்சரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, 1905ஆம் ஆண்டு முதல் இதுவரை நியமிக்கப்பட்ட 21ஆவது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இவராவார்.

நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வின்போது, நீதியமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்னேயும் இணைந்திருந்தார்.


Add new comment

Or log in with...