Tuesday, February 16, 2021 - 4:44pm
பொத்துவிலிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற வேன், வேளாண்மை இயந்திரம் ஏற்றி வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் வேன் சாரதி ஸ்தலத்தில் உயிரிழந்தார்.
இவ்விபத்து, தாண்டியடி பிரதேச வளைவில் நேற்று முன்தினம் (14) பி.ப.3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச சாரதி பயிற்சி நிலைய வேனே விபத்துக்குள்ளானது.
ஸ்தலத்திற்கு விரைந்த 1990 சுவசரிய அவசர சேவை, பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து, சடலத்தை மீட்டனர். பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
(கல்முனை மத்திய தினகரன் நிருபர்)
Add new comment