இலங்கையிடம் உதவி கோரும் இந்திய CBI

இந்தியாவில் உயிரிழந்ததாக கூறப்படும் மத்தும லசந்த சந்தன பெரேரா எனும் அங்கொட லொக்கா என்பவரின் சடலம் உண்மையில் அவருடையதா? என்பதை உறுதி செய்வதற்காக இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு இலங்கையிடம் உதவி கோரியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அங்கொட லொக்காவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் DNA மாதிரியை அனுப்பி வைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். களுத்துறை, எதனமடல பகுதியில் சிறைச்சாலை பஸ்சின் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னர் அங்கொட லொக்கா இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...