நெவில் பெனாண்டோ மருத்துவமனையின் நிறுவுனரான, வைத்தியர் நெவில் பெனாண்டோ காலமானார்.
கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில் IDH வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (04) மாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, IDH இன் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரணிக்கும் போது அவருக்கு 89 வயதாகும்.
வைத்தியர் நெவில் பெனாண்டோ, மாலபை நெவில் பெனாண்டோ வைத்தியசாலை மற்றும், SAITM பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் நிறுவுனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(நெவில் பெனாண்டோ வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்டபடம். இடது: அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வலது: வைத்தியர் நெவில் பெனாண்டோ)
நெவில் பெனாண்டோ வைத்தியசாலை, கடந்த 2017 ஜூலை 17இல் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்மாக கையளிக்கப்பட்டது. இதன்போது அரசாங்கத்திற்கும் நெவில் பெனாண்டோ வைத்தியசாலைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது.
Add new comment