மடுல்சீமை, எகிரிய பகுதியில் மீண்டும் நில அதிர்வு

மடுல்சீமை, எகிரிய பகுதியில் மீண்டும் நில அதிர்வு-Earth Tremor Reported-Akiriya-Madulsima-Passara

- எவ்வித பாதிப்பும் இல்லை; அச்சம் கொள்ளத் தேவையில்லை

பசறை, மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எகிரிய மற்றும் அதனை சூழவுள்ள பல கிராமங்களில் சிறிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இது சுமார் 2 ரிச்டர் அளவில் பதிவாகியிருப்பதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இன்று (31) அதிகாலை 2.56 மணியளவில் இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த அதிர்வு சுமார் 30 விநாடிகள் நீடித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயினும், இது குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என, புவிச் சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இதுவரை எந்தவொரு பாதிப்பும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் மடுல்சீமை பொலிஸ் பிரிவில் உள்ள எகிரிய மற்றும் அதனை அண்டிய கிராமங்களில், கடந்த 22 ஆம் திகதி அதிகாலை 3.30, 3.38, 3.56 மணியளவில், சிறிய நில அதிர்வு உணரப்பட்டடதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுங்கப் பணியகம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.


Add new comment

Or log in with...