ஐ.நா.ஆணைக்குழுவுக்கு மேலும் இரு தமிழ்க் கட்சிகளின் கடிதங்கள்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் அதுசார்ந்த பொறுப்புக்கூறல் விடயங்களை வலியுறுத்தி, சர்வதேச தரப்புக்கு மேலும் இரண்டு கடிதங்களை தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளும், சிவில் சமூகங்களும் இணைந்து அனுப்பவுள்ளன.

இதற்கான இணக்கப்பாடு இத் தரப்புகளுக்கிடையில் ஏற்கனவே எட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் விடயங்களை மனித உரிமைகள் பேரவையிலிருந்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு பாரப்படுத்துமாறும், போர்க்குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களுக்கான ஆதாரங்களை திரட்டுவதற்கான குறுங்கால பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறும் கோரி, தமிழ்க் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்தன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்பவற்றுடன் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளும் இந்தக் கடிதத்தில் கைச்சாத்திட்டிருந்தன.

அதேபோன்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை,
பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றுக்கும் இவ்வாறான இரண்டு கடிதங்களை பிரத்தியேகமாக அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...