துறைமுக கிழக்கு முனையம்; அதானிக்கு வழங்குவதால் இரு நாடுகளுக்கும் பயன்

- இலங்கை முகவராக ஜோன் கீல்ஸ் நிறுவனம்

இந்திய வெளிநாட்டமைச்சர் எஸ். ஜெய்சங்கர் 2021 ஜனவரி 06 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை தலைமைத்துவம் மற்றும் வர்த்தக சமூகத்துடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அரசாங்கம் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

கிழக்கு முனையத்தை இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை இணைந்து நடத்தும் முத்தரப்பு ஒப்பந்தம் 2019 மார்ச்சில் செய்து கொள்ளப்பட்டது. அரசாங்கம் 2019 நவம்பரில் ஆட்சிக்கு வந்ததையடுத்து, வெளிநாடுகளுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து திட்டங்களையும் மீளாய்வு செய்வதற்கு ஐவர் குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்தார்.

இந்திய இலங்கை வெளிநாட்டமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது கிழக்கு முனையம் இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டயடுத்து அதனால் இரு நாடுகளுக்கும் பயன்தரும் என்று கூறியிருந்தனர்.

மேற்படி கிழக்கு முனையம் தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தத்தின் அதானி குழுமத்தின் இலங்கை முகவராக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் செயற்படுமென்று அதானி குழுமம் அறிவித்துள்ளது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டின்ஸ் நிறுவனம் இலங்கையில் பல ஹோட்டில்களை முகாமைத்துவம் செய்து வருவதுடன் துறைமுகத்தின் தெற்காசிய நுழைவாயல் முனையத்தில் முதலீடு செய்துள்ளது.

மேற்படி ஒப்பந்தப்படி கிழக்கு முனையத்தின் 49 சதவீதம் இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்கப்படுகிறது.


Add new comment

Or log in with...