தடைகளை மீறி குருந்தூர் சென்ற தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் | தினகரன்

தடைகளை மீறி குருந்தூர் சென்ற தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்

தடைகளையும் மீறி தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், நேற்று (27) காலை குருந்தூர்மலைக்குச் சென்று, அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், வழிபாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேளமாளிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், பிரதேச சபை உறுப்பினர்களான சிலோகேஸ்வரன், த.றமேஷ், ச.ஜீவராசா உள்ளிட்ட குழுவினரே, இவ்வாறு, நேற்று (27) காலை, குருந்தூர் மலைக்குச் சென்றுள்ளனர். இதேவேளை, அங்கிருந்த இராணுவத்தினர், தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சென்ற வாகன இலங்கங்களைப் பதிவு செய்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

 


Add new comment

Or log in with...