இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோவுக்கும் கொரோனா | தினகரன்

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோவுக்கும் கொரோனா

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோவுக்கும் கொரோனா-State Minister Arundika Fernando Tested Positive for COVID19

- கொரோனா தொற்றிய 7ஆவது பாராளுமன்ற உறுப்பினர்

தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, தென்னை ,கித்துல்‌, பனை மற்றும்‌ இறப்பர்‌ செய்கை மேம்பாடு மற்றும்‌ அதுசார்ந்த கைத்தொழில்‌ பண்டங்கள்‌ உற்பத்தி மற்றும்‌ ஏற்றுமதி பல்வகைப்படுத்தல்‌ இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ, இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 7ஆவது பாராளுமன்ற உறுப்பினராவார்.

ஏற்கனவே தயாசிறி ஜயசேகர, ரஊப் ஹக்கீம், வாசுதேவ நாணயக்கார, பியல் நிஷாந்த, பவித்ரா வன்னியாரச்சி, வசந்த யாபா பண்டார ஆகிய 6 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதில் தயாசிறி ஜயசேகர, ரஊப் ஹக்கீம், வாசுதேவ நாணயக்கார ஆகியோர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 4 எம்.பிக்கள் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் (26) அவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிங்கள 'தேசிய சேவையில்' இடம்பெற்ற 'சுபாரதி' நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்ததாக, அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...