பேஸ்புக் இரத்த தானம் இலங்கையில் அறிமுகம்

பேஸ்புக் இரத்த தானம் இலங்கையில் அறிமுகம்-Facebook Blood Donations in Sri Lanka From January 27-2021

- வசதியைப் பெறும் 29ஆவது நாடு
- நாளை முதல் இணையலாம்

பேஸ்புக்கின் விசேட இரத்த தான (Blood Donations) வசதி இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நாளை (27) முதல் இவ்வசதி இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, இலங்கைக்கான பேஸ்புக் கொள்கை திட்ட முகாமையாளர் யசஸ் விசுத்தி அபேவிக்ரம தெரிவித்தார்.

இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பேஸ்புக் இரத்த தானம் இலங்கையில் அறிமுகம்-Facebook Blood Donations in Sri Lanka From January 27-2021

பேஸ்புக் இரத்த தானம் இலங்கையில் அறிமுகம்-Facebook Blood Donations in Sri Lanka From January 27-2021அந்த வகையில், பேஸ்புக் இரத்த தான அம்சத்தைப் பெறும் 29ஆவது நாடாக இலங்கை மாறியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த யசஸ், இந்த அம்சத்தை இலங்கையில் உள்ள பேஸ்புக் பயனர்கள் நாளை (27) முதல் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு, தேசிய இரத்த மாற்றீட்டு சேவை, சுகாதார மேம்பாட்டு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து இச்சேவை அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 24 இரத்த வங்கிகளும் இவ்வம்சத்துடன் இணைக்கப்படும்.

நாளை (27) முதல் 18-55 வயதுடைய எந்தவொரு பேஸ்புக் பயனர்களும் இந்த இரத்த தான  (Blood Donations) அம்சத்தில் தங்களை பதிவு செய்ய முடியும் என்பதோடு, தங்களுக்கு அருகிலுள்ள இரத்த தானம் மற்றும் மருத்துவமனையில் இரத்தத் தேவைகள் குறித்தான தகவல்களை அதன் மூலம் பெற முடியும்.

இலங்கையில் இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், மக்களை இரத்த தானம் செய்ய ஊக்குவிப்பதற்கும் இந்த விசேட கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, யசஸ் விசுத்தி அபேவிக்ரம தெரிவித்தார்.

இந்த அம்சத்தில் பதிவு செய்பவர்கள், இரத்த தேவைகள் குறித்த உடனுக்குடனான தகவல்களைப் பெறுவார்கள், என்பதோடு, இரத்த மையங்கள், மருத்துவமனைகள் இரத்த தானம் செய்வதற்கான தகுதியை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் இரத்த தானம் இலங்கையில் அறிமுகம்-Facebook Blood Donations in Sri Lanka From January 27-2021

இரத்த தானம் செய்வோர்

  • Facebook இல் இரத்த தானம் செய்பவராக இருக்க, பதிவு செய்யவும்.
  • அருகில் உள்ள எந்த இரத்த தான மையங்களுக்கு இரத்த தானம் செய்பவர்கள் தேவையா என்பதைப் பாருங்கள்.
  • நினைவூட்டல்களை அமைக்கலாம்.
  • உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களை இரத்த தானம் வழங்குபவர்களாக பதிவு செய்யும்படி அழைப்பு விடுக்கலாம்.

பேஸ்புக் இரத்த தானம் இலங்கையில் அறிமுகம்-Facebook Blood Donations in Sri Lanka From January 27-2021

உங்கள் வயது, உடல்நலம் மற்றும் பாலியல் வரலாறு மற்றும் ஏனைய காரணிகளை வைத்தே நீங்கள் இரத்த தானம் செய்ய முடியுமா என்பதை அறிய முடியும். Facebook இரத்த தான நிறுவனம் அல்ல மற்றும் இரத்த தானங்களை சேகரிக்காது. பேஸ்புக் எந்தக் குறிப்பிட்ட இரத்த வங்கியையோ அல்லது இரத்த தான நிறுவனத்தையோ பரிந்துரைக்கவில்லை அல்லது அதனுடன் இணைந்து பணியாற்றவில்லை. இரத்த தானம் செய்வதற்கு நீங்கள் தகுதியானவரா என்பது குறித்து கேள்விகள் இருந்தால், மருத்துவ நிபுணர் அல்லது இரத்த தான நிறுவனத்திடம் பேசவும்.

பேஸ்புக் இரத்த தானம் இலங்கையில் அறிமுகம்-Facebook Blood Donations in Sri Lanka From January 27-2021

நீங்கள் பதிவுசெய்திருந்து இனி பங்கேற்க விரும்பவில்லை என்றால், Facebook இல் இரத்த தானம் செய்பவராக இருப்பதிலிருந்து எப்படி என்னை அகற்றுவது என்பதைப் பற்றி அறிக. இரத்த தானங்கள் கருவியில் ஏதேனும் பிரச்சையைக் கண்டறிந்தால் அது சரியாக வேலை செய்யவில்லை என்று புகாரளிக்கலாம்.

இரத்த தான நிறுவனங்களுக்கானது
உங்கள் நிறுவனம் Facebook இரத்த தானங்கள் அம்சத்தின் இடுகைகளைப் பயன்படுத்தி உங்களைப் பின்தொடர்பவர்களுடன் தகவல்களைப் பகிரலாம். உங்கள் பக்கத்திலிருந்து இடுகையிடும்போது, இதனை நினைவில் கொள்ளுங்கள்:

  • உங்கள் நிறுவனத்திற்குக் குறிப்பிட்ட இரத்த வகைகள் அல்லது பிளேட்லெட்டுகளுக்கான நன்கொடையாளர்கள் தேவைப்பட்டால், அதை உங்கள் இடுகையில் குறிப்பிடலாம், இதனால் அந்த இரத்த வகைகள் மிகவும் தேவைப்படும் போது மக்களுக்குத் தெரியும்.
  • உங்கள் பக்கத்தில் இடுகையிட்டவைகள் உங்கள் பக்கத்தைப் பின்தொடர்பவர்களின் செய்தி ஊட்டத்திலும், Facebook இலிருந்து இரத்த தானம் குறித்தத் தகவல்களைப் பெறுவதற்காகப் பதிவுசெய்த அருகிலுள்ள நபர்களுக்கும் தோன்றும்.
  • நன்கொடையாளர்கள் இரத்த தானம் அளிப்பதைத் திட்டமிடுவதற்காக உங்கள் இடுகையில், ஃபோன் அழைப்புடனோ உங்கள் நிறுவனத்தின் இணையதளத்துடனோ திட்டமிடல் பொத்தானைச் சேர்க்கவும்.
  • உங்கள் கணினியின் Facebook இலிருந்து இடுகையை உருவாக்கினால் உங்கள் இடுகையில் திட்டமிடல் பொத்தானைச் சேர்க்கும் தேர்வு இருக்கும்
  • மொபைல் சாதனத்தின் Facebook இலிருந்து இடுகையை உருவாக்கினால் உங்கள் இடுகையில் திட்டமிடல் பொத்தான் தானாகவே தோன்றும். நீங்கள் இடுகையிட்ட பிறகு பொத்தானை அகற்ற தேர்வு இருக்கும்.

தொடங்குவதற்கு:
Facebook இன் இரத்த தானங்களுக்கு தகுதி பெற, உங்கள் நிறுவனம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிக.
Facebook இன் இரத்த தானங்களுக்கு பதிவு செய்ய, உங்கள் நிறுவனம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அறிக.

பேஸ்புக்கில் இரத்த தானங்களிலிருந்து எனது அமைப்பை எவ்வாறு அகற்றுவது?
பேஸ்புக்கில் இரத்த தானங்களுக்கு எனது அமைப்பு எவ்வாறு ஆதரவைப் பெற முடியும்?
பேஸ்புக்கில் இரத்த தானம் செய்பவராக நான் எவ்வாறு பதிவு பெறுவது?
இரத்த தானங்களுக்கு பேஸ்புக் எனது தகவலை எவ்வாறு பயன்படுத்துகிறது?

இரத்த தானம் செய்ய முடியாவிட்டால் நான் ஏன் பேஸ்புக்கில் இரத்த தானம் பற்றிய தகவலைப் பார்க்கிறேன்?


Add new comment

Or log in with...