சிறுவர் இல்லத்தின் பிரதான பராமரிப்பாளருக்கு பிணை | தினகரன்

சிறுவர் இல்லத்தின் பிரதான பராமரிப்பாளருக்கு பிணை

சிறுவர் இல்லத்தின் பிரதான பராமரிப்பாளருக்கு பிணை-Avanthi Devi Children's Home Child Abuse Incident-Warden Released on Bail

அநுராதபுரம் அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, அந்த இல்லத்தின் பிரதான பராமரிப்பாளரான பெண் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (26) அநுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி ஜனக பிரசன்ன முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன் போது அவரை தலா ரூ. 2 இலட்சம் கொண்ட 2 சரீரப் பிணைகளில் விடுதலை செய்வதற்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் சாட்சி வழங்கிய நபர்களை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம், அவ்வாறு மிரட்டல் விடுக்கப்படும் நிலையில் பிணை இரத்து செய்யப்படும் என்பதோடு, தண்டனை கடுமையானதாக இருக்கும் எனவும் நீதவான் குறித்த சந்தேக நபரை எச்சரித்தார்.

(அஸீம் கிலாப்தீன்)


Add new comment

Or log in with...