சீமெந்து லொறி - மோ. சைக்கிள் விபத்து; வயோதிபர் பலி | தினகரன்

சீமெந்து லொறி - மோ. சைக்கிள் விபத்து; வயோதிபர் பலி

சீமெந்து லொறி - மோ. சைக்கிள் விபத்து; வயோதிபர் பலி-Accident Elder Man Dead

திருகோணமலை, மட்டக்களப்பு பிரதான வீதி 64ஆம் கட்டை பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (25)  பிற்பகல் 2.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர், தாஹா நகரைச் சேர்ந்த முஹம்மது காசிம் முகம்மது சித்தீக் (70) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை  கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...