கனரக வாகன விபத்து; தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி | தினகரன்

கனரக வாகன விபத்து; தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று (24) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கனரக வாகனம் உயர் அழுத்த மின்சார தூணில் மோதுண்டதில் வாகனத்தின் சாரதி எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். 

இவ் விபத்து தொடர்பாக தெரிய வருவதாவது,

பொலன்னறுவையில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற கனரக வாகனம் வவுனியா புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலுள்ள மின்சார தூணில் மோதியுள்ளது.  விபத்தில் கனரக வாகனமும், மின்சார தூணும் சேதமடைந்ததுள்ளது. விரைந்து செயற்பட்ட மின்சார சபையினர் மின் வழங்கலை துண்டித்திருந்தமையால் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. 

விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஓமந்தை விஷேட நிருபர்  


Add new comment

Or log in with...