வடக்கு, கிழக்கில் மக்களது வாழ்வுரிமை; ஓரணியில் திரண்டு பாதுகாக்க ஒன்றிணைவு

நல்லூரில் நேற்று ஒன்றுதிரண்ட தமிழர் பிரதிநிதிகள்

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்த அவசர கலந்துரையாடல் நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடலில் பேசப்பட்டது.

அத்துடன், வடக்கு கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரிக்கப்படுதல், காணி சுவீகரிப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...