படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற பிரபல நடிகை | தினகரன்

படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற பிரபல நடிகை

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தார்.

தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார். அந்த வகையில் பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் 'மே டே' என்ற படத்தில் நடிகை ரகுல் நடித்து வருகிறார்.

ரகுல் பிரீத் சிங்

இந்த படத்தில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை ரகுல் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளிலேயே சென்றுள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 கிலோமீட்டர் சைக்கிளில் செல்வது தனக்கு நல்ல அனுபவமாக இருந்ததாக பதிவிட்டுள்ளார். மேலும் சைக்கிளில் சென்ற வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

 

 


Add new comment

Or log in with...