பாடசாலை சீருடை வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை சீருடை வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு-Validity Period of the Grade 1 Uniform Voucher Extended Until Feb 28

2020 ஆம் ஆண்டில் தரம் 01 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடை வவுச்சர்களுக்கான செல்லுபடியாகும் காலம், எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொவிட் நிலைமை காரணமாக, பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை, நாட்டின் பல பகுதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை, வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்கள் காரணமாக, சில மாணவர்களால் குறித்த வவுச்சர்களுக்கான சீருடையை பெறுவதில் சிக்கல் நிலை காணப்படுவதனை கருத்திற் கொண்டு, இம்முடிவை எடுத்துள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...