Oxford - AstraZeneca தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி

Oxford - AstraZeneca தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி-Oxford-AstraZeneca AZD1222  Vaccine Approved by NMRA

AstraZeneca நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்த, தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொடர்பான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் குறித்த தடுப்பூசியை, அவசர நிலைமைகளில் பயன்படுத்த குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஒளடத உற்பத்திகள்‌, வழங்குகைள்‌ மற்றும்‌ ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர்‌ பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

Oxford பல்கலைக்கழகம், AstraZeneca மருந்து நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் பலான தயாரிகப்பட்ட AZD1222 எனும் குறியீட்டைக் கொண்ட கொவிட்-19 நோய்க்கெதிரான தடுப்பூசியாகும்.

இது 90% செயற்றிறனைக் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...