தோப்பூரில் மேய்ச்சலின்றி மாடுகள் இறப்பு | தினகரன்

தோப்பூரில் மேய்ச்சலின்றி மாடுகள் இறப்பு

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் அதிகளவான மாடுகள் மேய்ச்சலின்றி உயிரிழப்பதாக  பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழக்கும் மாடுகள் தோப்பூர் களப்புக் கடலை அண்டிய காட்டுப்பகுதியில் அதிகளவில் காணமுடிகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதுகுறித்து பண்ணையாளர்கள் குறிப்பிடும்போது, மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளில் அதிகமான நிலங்களில் தற்போது பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் மாடுகளுக்கு போதுமான மேய்ச்சல் இல்லை எனவும், இதனால் தமது மாடுகள் மேய்கின்ற இடங்களிலேயே விழுந்து உயிரிழப்பதாக பண்ணையாளர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

தோப்பூர் குறூப் நிருபர்  

 

 


Add new comment

Or log in with...