பொதுவெளியில் 3 மாதத்தின் பின்னர் தோன்றினார் ஜக் மா

சீனாவின் பிரபல வர்த்தகரும் அலிபாபா நிறுவனருமான ஜக் மா சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் நேற்று பொதுவெளியில் தோன்றினார்.

கிராமப்புற ஆசியர்கள் 100 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஜக் மா வீடியோ மூலம் பேசியதாக சீனாவின் டியான் நியுஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னர், ஒக்டோபர் 24 ஆம் திகதி ஷாங்ஹாயில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜக் மா சீனாவின் வர்த்தகச் சட்ட திட்டங்களை விமர்சனம் செய்தார். பின்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவராக இருந்த அவர், அதன் இறுதிச் சுற்றில் கலந்துகொள்ளவில்லை.

கடந்த சில வாரங்களாக ஜக் மா காணாமல்போனதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. அதைத் தொடர்ந்து தற்போது அவர் பொதுவெளியில் தோன்றியுள்ளார்.

50 நொடிகள் உள்ள அந்த வீடியோவில் கொவிட்–19 சூழலால் நேரில் சந்திக்க முடியாதது குறித்து ஜக் மா பேசினார், நிலைமை சரியானதும் நேரில் சந்திப்பதாகவும் அவர் கூறினார்.

அலிபாபா நிறுவனத்தின் மீது சீன ஒழுங்குமுறை ஆணையம் அண்மையில் நம்பிக்கை மோசடி விசாரணையைத் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...