தயாசிறி ஜயசேகர குணமடைவு | தினகரன்

தயாசிறி ஜயசேகர குணமடைவு

தயாசிறி ஜயசேகர குணமடைவு-Dayasiri Jayasekara Recovered and Discharged

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அவருக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஹிக்கடுவை பிரதேசத்திலுள்ள தனியார் ஹோட்டலொன்றில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, அவர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, தொடர்ந்து மேலும் இரு வாரத்திற்கு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு சுகாதாரப் பிரிவினரால் அவருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...