கிராம சேவை உத்தியோகத்தர்கள் கறுப்புபட்டி அணிந்து பணிப்பகிஷ்கரிப்பு

செம்மண்ணோடை கிராம சேவை உத்தியோகத்தர் தாக்கப்பட்டமை தொடர்பில்  நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கிராம சேவை உத்தியோகத்தர்கள் கறுப்புபட்டி அணிந்து பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு  வருகின்றனர்.

கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சாதாத் கடந்த 2021.01.11ம் திகதி  நிவாரணப் பணியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் ஒரு குழுவினர் தங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்படவில்லை  என கூறி தாக்கியுள்ளனர்.

அவர்  தாக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருகின்றார். 

கிராம சேவை உத்தியோகத்தர் அன்று இரவே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் ஏழு சந்தேக நபர்களில் இரண்டு சந்தேக நபர்கள் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர்களை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்யாததால்  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகத்தர்கள் கருப்புபட்டி அணிந்து  பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

கிராம உத்தியோகத்தர் சாதா த்தை கடமையில் இருக்கும் போது தாக்கிய மிகுதி ஐந்து நபர்களை உடனடியாக வாழைச்சேனை பொலிஸார் கைது செய்ய வேண்டும் என்றும், கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி கிராம சேவை உத்தியோகத்தர்கள் கறுப்புபட்டி அணிந்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

கல்குடா தினகரன் நிருபர்    


Add new comment

Or log in with...