ரஞ்சனின் எம்.பி. பதவி வெற்றிடமானதாக சட்ட மாஅதிபர் தெரிவிப்பு | தினகரன்

ரஞ்சனின் எம்.பி. பதவி வெற்றிடமானதாக சட்ட மாஅதிபர் தெரிவிப்பு

ரஞ்சனின் எம்.பி. பதவி வெற்றிடமானதாக சட்ட மாஅதிபர் தெரிவிப்பு-Ranjan Ramanayake's MP Seat Vacant-Attorney General

நீதிமன்ற அவமதிப்பு குற்றம் தொடர்பில் 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக, சட்ட மாஅதிபர் முடிவு செய்துள்ளார்.

குறித்த முடிவு, சட்ட மாஅதிபரினால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் (12) உச்சநீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...