வெற்றிகரமாக 2020 ஐ நிறைவு செய்த OPPO 2021 இல் காலடி வைப்பு | தினகரன்

வெற்றிகரமாக 2020 ஐ நிறைவு செய்த OPPO 2021 இல் காலடி வைப்பு

வெற்றிகரமாக 2020 ஐ நிறைவு செய்த OPPO 2021 இல் காலடி வைப்பு-OPPO-2020 in-Retrospect

இலங்கையின் மிகவும் புகழ் பெற்ற கையடக்கத் தொலைப்பேசிகள் மற்றும் சாதனங்கள் நாமமான OPPO ஆனது உள்நாட்டு வாடிக்கையாளர்களால் புத்திசாலித்தனமாக பெறத்தக்க வகையில் உள்நாட்டுச் சந்தையில் புதிய உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்கியதன் மூலம் 2020 ஆம் ஆண்டினை சாதகமாக நிறைவு செய்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட OPPO ஆனது இலங்கையில் 2020 ஆம் ஆண்டில் 5 ஆவது ஆண்டினை நிறைவு செய்ததுடன் உலகளாவிய ரீதியில் 16 ஆவது ஆண்டினை நிறைவு செய்துள்ளது.

பின்னோக்கிப் பார்க்கும்போது, Xinda Lanka (Pvt) Ltd [OPPO Sri Lanka] நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி   போப்  லி இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நீண்ட மாதங்களுக்கு நீடித்த முடக்கல் நிலை தளர்த்தப்பட்டதைத்  தொடர்ந்து இந்த நிகழ்விற்கு வருகை புரிந்ததை  நினைவு கூர்ந்தார். மற்றும் மிகுந்த பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்க '1 மணிநேர ஃப்ளாஷ் ஃபிக்ஸ்' சேவையை அறிமுகப்படுத்தினார். OPPO அனைத்து சாதனங்களுக்கும் அதன் உத்தரவாத காலத்தை வாடிக்கையாளர்களுக்காக இரண்டு மாதங்களுக்கு நீடித்ததுடன், அரசாங்கத்தின் உலகளாவிய தொற்று நோயினைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு இசைவாக கோவிட்-19 நிதியத்துக்கு இலங்கைக்கு ரூ. 1.2 மில்லியனை வழங்குவதாக  உறுதியளித்தது.

மேலதிகமாக இந்த நாமமானது 2020 இல் புதிய மாதிரிகளின் கலவையான OPPO F15, F17 & F17 Pro & Reno 3 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இந்த கருவிகள் Enco W51, Enco Free ஆகியவற்றுடன் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டதுடன்  மற்றும் ஸ்டைல் இலும் செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கும் Enco வரிசையிலான ஏனைய வயர்களற்ற ஹெட்செட்டுகள்  இந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

நவம்பர் மாதத்தில் OPPO ஆனது ''மனிதர்களுக்கான தொழில்நுட்பம் - உலகுக்கான அன்பு’’ எனும் தொனிப்பொருளில் தனது புத்தாக்கத்தினத்தை இணையத்தள நிகழ்வாக நடத்தியது.  இந்த தினமானது வருடாந்த நிகழ்வாக இருந்ததுடன் இதில் துறைசார் வல்லுநர்கள், பங்குதாரர்கள் ஆகியோர் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் தொடர்பான தமது கருத்தினை தெரிவித்தனர். புத்தாக்க தினமானது இவ்வாண்டு OPPO X எனும் நெகிழக் கூடிய காட்சியமைப்பு மற்றும் கட்டமைப்பு அடுக்குடன் கூடிய சுற்றக்கூடிய கைபேசியின் வருகையை காட்சிப்படுத்தியது. அத்துடன் 2021 ஆம் ஆண்டு தொடக்கம் அனைத்து ஸ்மார்ட் தொலைப்பேசிகளிலும் ஒருங்கிணைக்கப்பட்ட பூரணமான நிற முகாமைத்துவ முறைமையை திரைநீக்கம் செய்வதாகவும் அமைந்திருந்தது. இந்த தொழில்நுட்பமானது அதிகாரப்பூர்வமானதும்  துல்லியமானதுமான நிற மீள் உற்பத்தியை பூரண DCI-P3 பரந்த வண்ணக்களம் மற்றும் 10 துணுக்கு நிற ஆழத்தையும் வெளிப்படுத்தக் கூடியதாகும். 

OPPO விற்பனையாளர் மாநாட்டில் (ODC), OPPO ஆனது 29.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுடனான'' அதிகளவு இயலக்கூடிய திட்டம் 2.0 ''யை தனிப்பட்ட பொழுதுப்போக்கு, வீட்டு உபகரணங்களுக்கான அலங்காரங்கள் மற்றும் விளையாட்டு மற்றும் சுகாதாரம் போன்ற பிரிவுகளின் சூழலியல் பங்காளர்களுக்கு உறுதியளித்தது.

ODCஇல், அதிகளவு அறிவிப்புகள் நாமத்தில் வருகை தரவுள்ள ஸ்மார்ட் தொலைக்காட்சி சந்தையில்  இரண்டாவது மொபைல் சாதனங்களாக நாமத்தின் எழுச்சியை குறிப்பிடக்கூடிய ஸ்மார்ட்   தொலைக்காட்சியை உள்ளடக்கிய உற்பத்திகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டன. 

OPPO ஆனது சீன சர்வதேச துறை வடிவமைப்பு கண்காட்சி -2020 இல் பங்குபற்றியதுடன் அங்கு இரு கருதார்ந்த வடிவமைப்புகளான'' ஸ்லைடு தொலைப்பேசி ''மற்றும் ''இசை இணைப்பு'' என்பவற்றை  ஜப்பானை அடிப்படையாகக் கொண்ட துறைசார் வடிவமைப்பு ஸ்டுடியோவான  Nendo வுடன் இணைந்து காட்சிப்படுத்தியது.

''தற்போதைய சூழல் மற்றும் சூழ்நிலைகளின் கீழ் சவால்கள் இருந்தபோதிலும், நாமமானது துன்பத்தை ஒரு ஆசீர்வாதமாக மாற்றுவதற்கும், ஊக்கமளிப்பதற்கும் எங்கள் சுறுசுறுப்பு மற்றும் தகவமைப்பு திறன் காரணமாக இருந்தமை எமது வெற்றி ஆகும். இது எங்களுக்கு பலவற்றுக்கான  ‘முதல்’ஆண்டாக இருந்ததுடன் F15யை அறிமுகப்படுத்திய முற்றிலும் முதல் நாமம் என்ற நிலையில் மகிழ்ச்சியுறுகிறோம். இலங்கையில் எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்காக இன்னும் பல புதிய தயாரிப்புகள், சேவைகளை வழங்க எதிர்பார்க்கின்றோம் ”என்று OPPO ஸ்ரீலங்காவின்  பிரதம நிறைவேற்றதிகாரியான  போப்லி  கூறினார்.


Add new comment

Or log in with...