டிப்ளோமா நிறைவு செய்தோருக்கு ஆசிரியர் நியமனக் கடிதங்கள்

டிப்ளோமா நிறைவு செய்தோருக்கு ஆசிரியர் நியமனக் கடிதங்கள்-Teaching Appointments for Diploma Holders

- நாளை முதல் கடமையில்

தேசிய கல்வி கல்லூரிகளில் டிப்ளமோ  பயிற்சி நெறியை நிறைவு செய்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  தமிழ் மொழி மூலம் 327 பேர்களுக்கு  இன்று (17) நியமனங்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது நிலவும்  நிலைமை காரணமாக வலயக்கல்விப் பணிப்பாளர் ஊடாக ஊடக இந்நியமனங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

டிப்ளோமா நிறைவு செய்தோருக்கு ஆசிரியர் நியமனக் கடிதங்கள்-Teaching Appointments for Diploma Holders

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்திகுட்பட்ட கல்வி வலயத்தில் 28 பேர்களுக்கான  நியமனக் கடிதங்களை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. நசூஹர் கான் தலைமையில் இன்று வழங்கி வைக்கப்பட்டன .

இந்நிகழ்வு கிண்ணியா வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
டிப்ளோமா நிறைவு செய்தோருக்கு ஆசிரியர் நியமனக் கடிதங்கள்-Teaching Appointments for Diploma Holders

இதில் கிண்ணியா வலயத்தில் பரதநாட்டியம் ஒருவரும் விஞ்ஞானம் 05 பேர்களும் ஆரம்பக்கல்வி 8 பேர்களும், மனைப் பொருளியல் 05 பேர்களும், நாடகமும் அரங்கியலும் ஒருவரும் விவசாயம் 03 பேரும் இஸ்லாம் ஒருவரும் நுண்கலை ஒருவரும் விஞ்ஞானம் ஆங்கில மொழிமூலம் மீடியம் ஒருவரும் தகவல் தொழிநுட்பம் இரண்டு பேருமாக மொத்தமாக 28 பேர்களுக்கு நியமனக் கடிதங்கள் வலயக் கல்விப் பணிப்பாளரினால் கையளிக்கப்பட்டன.

இந் நிகழ்வில் வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர் நாளை (28) முதல் இவர்கள் பாடசாலையில் கடமையை பொறுப்புப்பேற்று சேவைகளை ஆரம்பிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

(திருமலை மாவட்ட விசேட நிருபர் - அப்துல் பரீத்)


Add new comment

Or log in with...