இந்தியாவுக்கு எதிரான இறுதி டெஸ்ட்: அவுஸ்திரேலியா 369 ஓட்டங்கள்

இந்தியாவுக்கு எதிராக பிரிஸ்பனில் நேற்று (15) ஆரம்பமான போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காவதும் கடைசியுமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 369 ஓட்டங்ளைப் பெற்றுள்ளது.

டேவிட் வோர்னர் (1), மார்க்கஸ் ஹெரிஸ் (5) ஆகியோரை குறைந்த ஓட்டங்களுக்கு இழந்த அவுஸ்திரேலியாவுக்கு மார்னுஸ் லபுஸ்சானேயின் அபார சதம் (108) கைகொடுத்தது.

இந்தியாவின் அறிமுக வீரர்களான தமிழகத்தின் வொஷிங்டன் சுந்தர், தங்கராசு நடராஜன் ஆகிய இருவரும் மிகத் திறமையாக பந்துவீசி தத்தமது முதலாவது விக்கெட்களைக் கைப்பற்றினர்.

ஸ்டிவன் ஸ்மித்தின் விக்கெட்டை சுந்தரும் மெத்யூ வேடின் விக்கெட்டை நடராஜனும் தத்தமது முதலாவது டெஸ்ட் விக்கெட்களாக பதிவு செய்தனர்.

லபுஸ்சான் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி தனது ஐந்தாவது டெஸ்ட சதத்தைப் பூர்த்திசெய்தார். எனினும் 108 ஓட்டங்கள் பெற்று அவர் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டையும் நடராஜன் வீழ்த்தினார்

அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் மெத்யூ வேட் (45), ஸ்டீவன் ஸ்மித் (38), டிம் பெய்ன் (38 ஆ.இ.), கெமரன் க்றீன் (28 ஆ.இ.) ஆகியோரும் திறமையை வெளிப்படுத்தினர்.

பந்துவீச்சில் நடராஜன், ஷர்துல் தாகுர், வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடி வருகிறது.


Add new comment

Or log in with...