மேம்படுத்தப்பட்ட விளையாட்டு கட்டமைப்பு, கேமிங் தொகுப்புகள் SLT-MOBITEL அறிமுகம்

தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழும் SLT-MOBITEL சர்வதேச கேமிங் மற்றும் நவிளையாட்டு தொழில் நுட்ப நிறுவனமான Swarmio Media உடன் இணைந்து, தமது மேம்படுத்தப்பட்டட SLTN கேமிங் மற்றும் நவிளையாட்டு கட்டமைப்பான www.slt.lk/esports அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையிலுள்ள தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் நிறுவனமொன்றின் உரித்தாண்மையின் கீழ் காணப்படும் முதலாவதும் ஒரே கேமிங் மற்றும் நவிளையாட்டுகட்டமைப்பாக இது அமைந்துள்ளது.

நவிளையாட்டு கேமர் கட்டமைப்பு என்பது இணைய அடிப்படையிலான, user-intuitive portal ஆக அமைந்திருப்பதுடன், சைபர் மெய்வல்லுநர் வீரர்களுக்கு போட்டிகரமான சுற்றுப் போட்டிகள், சவால்கள், சமூக கேம் சேவர்கள், பிரத்தியேககேம் சேவர்கள், நவிளையாட்டுஉள்ளடக்கம் மற்றும் streamed feeds போன்றவற்றை உலகின் சிறந்த செல்வாக்குச் செலுத்துவோரிடமிருந்து வழங்குவதாகவும் அமைந்துள்ளது. இலங்கையில் முழுமையாக சீரமைக்கப்பட்ட, மிகக்குறைந்த செயலிழப்புத் திறனுடனான கேமிங் அனுபவத்தை இந்தகட்டமைப்பு வழங்குகின்றது.

மேம்படுத்தப்பட்ட இந்தக் கட்டமைப்பு 4 பிரதான அம்சங்களைக் கொண்டுள்ளது. கேமர் வாழ்க்கை முறை–விளையாட்டு, உள்ளடக்கம், சமூகம் மற்றும் வெகுமதிகள் போன்றனஅவையாகும். இதனூடாகவாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான ஸ்ட்ரீமிங் ஆற்றல்கள் சேர்க்கப்படுவதுடன், பிரத்தியேகமான விளையாட்டு வீரர் கோவைகள், லோயல்டி புள்ளிகள் அடங்கலாக பல அனுகூலங்கள் மற்றும் பலவிசேட உள்ளம்சங்கள் மற்றும் ரிவோர்ட்கள் போன்றன அடங்கியுள்ளன. SLT-MOBITEL இனால், விசேட'கேமிங் தொகுதிகள்' வழங்கப்படுவதுடன், அதில் அடுத்ததலை முறைகேமர் இணையத் தீர்வும் அடங்கியுள்ளது. நாட்டில் காணப்படும் சிறந்தகேமிங் அனுபவத்தை குறைந்த டேடா செலவில் வழங்குவதாக இந்தவசதி அமைந்துள்ளது. Gamer Lite, Gamer Premium மற்றும் Streamer Premium போன்ற கேமிங் தொகுதிகளுக்கு Fanytime data வசதியை வழங்குகின்றது. நவிளையாட்டு வரலாற்றில் இதுவேமுதல் முறையாக கெமர்களுக்கென குறிப்பிட்ட டேட்டா தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அறிமுகநிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இதில் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகாரஅமைச்சர் நாமல் ராஜபக்ச, இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினன், SLT குழும தவிசாளர் ரொஹான் பெர்னாண்டோ, SLT குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன, SLT இன் பிரதமநிறை வேற்று அதிகாரி கித்தி பெரேரா, SLT மொபிடெல் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திகவிதாரன மற்றும் SLT இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி பிரியந்த பெர்னாண்டஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதிய SLTMobitel நவிளையாட்டுகட்டமைப்பின் அறிமுகம் தொடர்பில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உரையாற்றும் போது, உலகளாவிய ரீதியில் காணப்படும் விளையாட்டு நிலைவரங்களின் பிரகாரம் இலங்கையை தரமுயர்த்த வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். அமைச்சின் நோக்கமான, இலங்கையில் நவிளையாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வழங்கும் பங்களிப்புக்காக அமைச்சர் SLT க்கு நன்றி தெரிவித்தார். 'கேமிங் பிரிவில் சர்வதேச சென்றடைவை பற்றிக் கருத்தில் கொள்ளும் போது, இது உண்மையில் சரியான வழியில் எடுத்துவைக்கும் ஒருபடியாக அமைந்துள்ளது. அவர்களது புத்தாக்கத்துக்காகவும், இத்துறையில் அலைகளை உருவாக்கியதற்கும், இளைஞர்களை ஈடுபடுத்தி மேற்கொண்டுள்ள இச்செயற்த்திட்டத்திற்கும் SLT க்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன். இளைஞர்களே இந்தநாட்டின் எதிர்காலம். அவர்களின் நிபுணத்துவத்தில் தம்மைமேம்படுத்திக் கொள்ள பங்களிப்பு வழங்குவது மற்றும் திறன்களை மேம்படுத்திக் கொள்ள உதவுவதனூடாக இலங்கைக்கு பயன் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் 'என்றார். சர்வதேச நவிளையாட்டு சம்மேளனத்தில் இலங்கை அங்கம் வகிப்பதுடன், இலங்கை நவிளையாட்டு சம்மேளனம் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரத்தையும் நவிளையாட்டு பெற்றுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

இலங்கையின் இளைஞர்களுக்கு தமது நவிளையாட்டு திறன்களை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்வதற்கான SLT இன் இலக்குகள் தொடர்பில் SLT இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், 'கடந்த தசாப்தகாலத்தில் அதிகளவு வளர்ச்சியடைந்த பிரிவுகளில் ஒன்றாக நவிளையாட்டுகள் மற்றும் கேமிங் அமைந்திருந்ததை நாம் அவதானித்தோம். இலங்கையின் முதல் தர டிஜிட்டல் வாழ்க்கைமுறை செயற்படுத்துநர் எனும் வகையில், துறையின் சிறந்த நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், கேமிங் மற்றும் நவிளையாட்டுகளில் இலங்கையிலும் இந்திய உபகண்டத்திலும் சந்தை முன்னோடி நிலையை எய்தும் வகையில் செயலாற்றுகின்றோம். ஒப்பற்ற கேமிங் அனுபவத்தை வழங்கும், சந்தையில் காணப்படும் நவீன வசதிகள் படைத்த கட்டமைப்பை எமது வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்வதை உறுதிசெய்வது எமது இலக்காக அமைந்துள்ளது.


Add new comment

Or log in with...