இராஜாங்க அமைச்சர் தயாசிறியுடன் நெருங்கி பழகிய 118 பேர் சுயதனிமைப்படுத்தல் | தினகரன்

இராஜாங்க அமைச்சர் தயாசிறியுடன் நெருங்கி பழகிய 118 பேர் சுயதனிமைப்படுத்தல்

பத்திக் கைத்தரி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்திகள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய 118 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பத்திக் கைத்தரி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்திகள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர நெருங்கிப் பழகிய சமய பெரியார்கள் ஐந்து பேர் உட்பட ஹெட்டிப்பொலவில் உள்ள அலுவலகத்திற்கு மக்கள் சந்திப்பு
தினத்தன்று சமுகமளித்த 75 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி அவர்களுடைய வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பி. சீ . ஆர் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். இதற்கு மேலதிகமாக அமைச்சருடைய குடும்ப அங்கத்தவர்கள்,பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் ஹிக்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுயதனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் நெருங்கிய பழகிய 118 நபர்கள் சுய தனிமப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாவத்தகம தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...