கிரிஉல்ல, பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல்

கிரிஉல்ல, பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல்-Some Grama Niladhari Divisions in Giriulla-Poojapitiya Police Divisions Isolated

கிரிஉல்ல மற்றும் பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒரு சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மும்மான, வெத்தேவ கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், கண்டி, பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள கொஸ்கொட்ட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு சில பகுதிகளும் இன்று (09) முதல் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...