கோதுமை எனும் போர்வையில் 7,500 கி.கி. மஞ்சள் இறக்குமதி; ரூ. 1 ½ கோடி பெறுமதி

கோதுமை எனும் போர்வையில் 7,500 கி.கி. மஞ்சள் இறக்குமதி; ரூ. 1 ½ கோடி பெறுமதி-7500kg Turmeric Imported Described as Wheat Flour-Customs

- மோதறையைச் சேர்ந்த வர்த்தகருக்கு விளக்கமறியல்

கோதுமை மாவை இறக்குமதி செய்வதாக தெரிவித்து, இறக்குமதி செய்யப்பட்ட ரூ. 150 மில்லியன் (ரூ. 1 ½) பெறுமதியான 7,500 கிலோகிராம் மஞ்சளை சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது.

கோதுமை எனும் போர்வையில் 7,500 கி.கி. மஞ்சள் இறக்குமதி; ரூ. 1 ½ கோடி பெறுமதி-7500kg Turmeric Imported Described as Wheat Flour-Customs

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி கைப்பற்றப்பட்ட குறித்த கொள்கலன் இன்று (04) ஊடகங்கள் முன்னிலையில் திறந்து காண்பிக்கப்பட்டது.

ரூ. 15 மில்லியன் (ரூ. 1.5 கோடி) பெறுமதியான 19,350 கிலோகிராம் கோதுமை மாவை இறக்குமதி செய்வதாக, சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டு குறித்த மஞ்சள் தூள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

கோதுமை எனும் போர்வையில் 7,500 கி.கி. மஞ்சள் இறக்குமதி; ரூ. 1 ½ கோடி பெறுமதி-7500kg Turmeric Imported Described as Wheat Flour-Customs

மோதறை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரினால் இந்தியாவிலிருந்து இறக்குமதி குறித்த மஞ்சள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த சந்தேகநபர் கடந்த டிசம்பர் 31ஆம் திகதி, கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 13ஆம் திகதி வரை அவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாக, சுனில் ஜயரத்ன தெரிவித்ததோடு, இதற்கு முந்தைய சந்தர்ப்பத்திலும் சந்தேகநபருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கோதுமை எனும் போர்வையில் 7,500 கி.கி. மஞ்சள் இறக்குமதி; ரூ. 1 ½ கோடி பெறுமதி-7500kg Turmeric Imported Described as Wheat Flour-Customs

கோதுமை எனும் போர்வையில் 7,500 கி.கி. மஞ்சள் இறக்குமதி; ரூ. 1 ½ கோடி பெறுமதி-7500kg Turmeric Imported Described as Wheat Flour-Customs

Add new comment

Or log in with...