கிளிநொச்சி, கல்மடு பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் யானை பிரதேச மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்று (26) இரவு குறித்த பகுதிக்கு வந்த காட்டு யானை வயலை உணவாக்கி அழித்துள்ளதுடன், அப்பகுதியில் உயிரிழந்துள்ளது.
இன்று காலை வயல் நிலத்தை பார்வையிட சென்ற பொது மக்கள் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராமசேவையாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உயிரிழந்த யானை தந்தந்துடன் காணப்படுவதுடன், மக்கள் அதனை பார்வையிட்டு வருகின்றனர். குறித்த பகுதி அடர் காட்டினை அண்மித்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
யானை உயிரிழந்தமை தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசாரும், வன ஜீவராசிகள் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(பரந்தன் குறுாப் நிருபர் - யது பாஸ்கரன்)
Add new comment