கொரோனா பரவல்; சிறைச்சாலை கொத்தணி 3,596 பேராக அதிகரிப்பு | தினகரன்

கொரோனா பரவல்; சிறைச்சாலை கொத்தணி 3,596 பேராக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று கொத்தணியின் எண்ணிக்கை 3,596 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சிறைக்கைதிகள் 2,664 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 90 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் என்பதுடன் மரணமானவர்களின் எண்ணிக்கை 05 ஆக பதிவாகியுள்ளது. சிறைச்சாலை கட்டமைப்புக்குள் அதிகளவில் பதிவாகியிருப்பது மகசின் சிறைச்சாலையிலேயே
இங்கு 823 கைதிகள் தொற்றுக்குள்ளாகி இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் 810 பேரும், கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் 389 பேரும், மஹர சிறைச்சாலையில் 735 பேரும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் 58 பேரும் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

நேற்றைய பதிவின்படி சிறைச்சாலைகளில் பதிவான கொத்தணி நோயாளிகளில் 3,280 பேர் ஆண்கள் என்றும் 200 பேர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதில் சிறைச்சாலை அதிகாரிகள் 116 பேரும் அடங்குகின்றனர்.


Add new comment

Or log in with...