மஹர சிறை கைதிகளின் சடலங்களை எரிப்பதா? அடக்கம் செய்வதா? 30ஆம் திகதி தீர்ப்பு | தினகரன்

மஹர சிறை கைதிகளின் சடலங்களை எரிப்பதா? அடக்கம் செய்வதா? 30ஆம் திகதி தீர்ப்பு

மஹர சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதா? அல்லது தகனம் செய்வதா? என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற குழப்பகரமான சம்பவங்களின் போது மரணமடைந்த மேலும் நால்வரின் மரண பரிசோதனை அறிக்கை நேற்றைய தினம் வத்தளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க மேற்படி உடல்களை அடக்கம் செய்வதா? அல்லது தகனம் செய்வதா? என்பது தொடர்பான நீதிமன்றத்தின் தீர்மானம் எதிர்வரும் 30ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

கடந்த நவம்பர் 29ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற குழப்பகரமான சம்பவங்களின்போது 11 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் 8 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்பது இனங்காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...