தப்பிச் சென்ற கொரோனா நோயாளி மருதானையில் கண்டுபிடிப்பு

தப்பிச் சென்ற கொரோனா நோயாளி மருதானையில் கண்டுபிடிப்பு-COVID19 Patient Escaped From Welisara NHRD Found at Maradana

வெலிசறை வைத்தியசாலையிலிருந்து தப்பிய கொரோனா தொற்றாளர், மருதானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிசறையிலுள்ள சுவாச நோய்களுக்கான தேசிய வைத்தியசாலையில், காச நோய் தொடர்பான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.

43 வயதான குறித்த நபர், போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது, மருதானையில் வசிப்பதாக போலியான விலாசத்தை வழங்கியிருந்ததாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், DIG அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

குறித்த நபர் நேற்று பிற்பகல் (15) வெலிசறை வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் அவரை கண்டுபிடிக்க உதவுமாறு, அவரது புகைப்படத்தை பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியிருந்தனர்.

தற்போது அவர் மருதானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...