சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பதினைந்து பேருக்கு எதிராக வழக்கு

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் நடமாடிய 15 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ். அகிலன் தெரிவித்தார்.

கடந்த இரு வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துவரும் நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாகவே இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக கூறினார். பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்பினால் மாத்திரமே இத்தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவ்வாறு மக்கள் ஒத்துழைக்காத பட்சத்தில் இவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முகக்கவசம் இன்றி சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் தேவையற்ற விதத்தில் நடமாடும் அனைவரும் கைது செய்யப்பட்டு, அதே இடத்தில் அன்ரியன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...