ஐரோப்பா எங்கும் இணையவழியில் ஏங்கெல்ஸின் 200வது பிறந்த தினம்

பிரெடரிக் ஏங்கெல்ஸ் பிறந்த வூபெரெல் என்ற ஜேர்மன் நகரில் உள்ள வரலாற்று நிலையத்தின் ஒரு கல்விமானான லார்ஸ் புளூமா 100 க்கும் அதிகமான நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் திட்டமிட்டிருக்கிறார். 'அந்த நகரத்தின் மிகவும் பிரபல்யமான மகன்' என்று ஏங்கெல்ஸை அழைக்கும் புளூமா, அவரது சிந்தனைகள் அவற்றின் காலத்துக்கும் அப்பால் இன்னமும் நினைவு கூரப்படுகின்றன என்று கூறுகிறார்.

தீவிரமாகப் பரவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியிலும் கார்ள் மார்க்ஸின் நெருங்கிய நண்பரும், பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதியுமான பிரெடரிக் ஏங்கெல்ஸின் இரண்டாவது பிறந்த நூற்றாண்டு தினம் (நவம்பர் 29) ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களில் பெரும்பாலும் இணையவழி மூலம் கொண்டாடப்பட்டது.

ஏங்கெல்ஸ் பிறந்த ஜேர்மனியின் மேற்குப் பகுதி நகரான வூபெரெல்லில் சமூக விழாக்கள், களியாட்டங்கள், கண்காட்சிகள், சுற்றுலாக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. இந்த வருடத்தை அவர்கள் ' ஏங்கெல்ஸ் வருடம் ' என்று அழைக்கிறார்கள்.அதிகரிக்கும் கொவிட் -- 19 தொற்றுநோய்க்கு மத்தியில் நீடிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் விளைவாக, ஏங்கெல்ஸின் பிறப்பை நினைவு கூரும் நிகழ்வுகள் பெரும்பாலும் இணையவழியிலேயே நடத்தப்படுகின்றன. வூபெரெல் நகரின் மத்திய நூல் நிலையம் 'மனிதன் ஏங்கெல்ஸ்' என்ற பெயரில் கண்காட்சியொன்றை அதன் பிரதான இணையத்தளத்தில் தொடங்கியது. இந்தக் கண்காட்சியில் ஏங்கெல்ஸின் ஆளுமையும் சாதனைகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

'பிரெடரிக் ஏங்கெல்ஸ் -- குறைத்து மதிப்பிடப்பட்டார்' என்ற தலைப்பிலான புதிய விவரணத் திரைப்படம் ஏங்கெல்ஸின் பிறந்த தினத்துக்கு ஒருவாரம் முன்னதாக உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஏங்கெல்ஸையும் கார்ள் மார்க்ஸையும் உலக வரலாற்றில் மிகவும் பிரபல்யமான இரட்டையர்களில் ஒருவர்' என்று குறிப்பிடும் திரைப்படம் அவர்களின் வாழ்வுகள் மற்றும் மார்க்சியக் கோட்பாட்டை விருத்தி செய்வதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மீது கவனத்தைச் செலுத்துகிறது.

அதேவேளை, எதிர்வரும் வாரங்களில் , தொற்றுநோய் நிலைவரத்தைப் பொறுத்து பெரும்பாலும் இணையவழியில் தொடர்ச்சியானஆய்வுக் கட்டுரைகள் வாசிப்பு, விரிவுரைகள் மற்றும் கலந்துரையாடல்களும்திட்டமிடப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டை 'ஏங்கெல்ஸ் வருடம்' என்று பெயரிட்ட வூபெரெல் நகரின் வரலாற்று நிலையத்தின் கல்விமான் லார்ஸ் பு ளூமா 100 க்கும் அதிகமான செயற்பாடுகளுக்கு திட்டமிட்டிருக்கிறார். உணர்வெழுச்சியுடைய இளம் ஏங்கெல்ஸை 'புகழ் பெற்ற சிந்தனாவாதி' என்றும் 'செயல்வீரர்' என்றும் வூபெரெல்லின் புதல்வன் என்றும் வர்ணிக்கும் வர்ணிக்கும் சுவரொட்டிகள் நகரெங்கும் காணப்படுகின்றன.

'நகரின் மிகவும் பிரபல்யமான மகன்' எனறு அழைத்த பு ளூமா ஏங்கெல்ஸ் இன்னமும் நினைவு கூரப்படுகிறார். ஏனென்றால், அவரது சிந்தனைகள் அவற்றின் காலத்துக்கும் அப்பால் நிலைத்திருப்பவையாகும் என்று குறிப்பிட்டார்.

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் சீன துணைத்தூதரினால் இணையவழி மூலம் வியாழக்கிழமை ஏற்பாடு செய்ப்பட்ட நிகழ்வொன்றில் ஏங்கெல்ஸின் 200வது தினம் அனுஷடிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் ஏங்கெல்ஸின் 70 பிறந்த தின நிகழ்வின் காட்சி மீளநிகழ்த்திக் காட்டப்பட்டது. ரஷ்யக் கவிஞர் அலெக்சாண்டர் பஷ்கினின் கவிதையும் வாசிக்கப்பட்டதுடன் இசைநிகழ்ச்சியும் இடம்பெற்றது.

இணையவழி நிகழ்வின் போது 300 க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். சீன துணைத் தூதரக பிரதிநிதிகள், பிரிட்டனில் உள்ள சீன வர்த்தகர்கள் மற்றும் மாணவர்கள் மான்செஸ்டர் நகரில் உள்ள ஏங்கெல்ஸின் உருவச்சிலைக்கு மலர்வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தியதைக் காணக் கூடியதாக இருந்தது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து சகலரும் நிலைபேறாக மீட்சிபெறுவதற்கு உதவும் முயற்சியாக சீனாவுடன் ஒத்துழைக்க தயாராயிருப்பதாக ஏங்கெல்ஸின் 200 வது பிறந்த தினத்தை முன்னிட்டு லீஸ் கூறினார்.

இவ்வாரம் முன்னதாக, ஏங்கெல்ஸை நினைவு கூருவதற்காக சீனாவின் தேசிய ஆட்சிமுறை அகாடமியும் மான்செஸ்டர் நகர கவுன்சிலும் சேர்ந்து சீன, பிரிட்டிஷ் நகரங்களின் பொருளாதார மீட்சியும் கைத்தொழில் மறுசீரமைப்பும் பற்றிய கருத்தரங்கொன்றை நடத்தின. இரு தரப்பையும் சேர்ந்த பிரதிநிதிகள் கைத்தொழில் மறுசீரமைப்பு, புத்தாக்கம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றி ஆராய்ந்தனர்.

1842 இலையுதிர்காலத்தில் ஏங்கெல்ஸ் மான்செஸ்டருக்கு குடிபெயர்ந்து தனது கடும்பத்தின் ஆடை தயாரிப்பு வர்த்தகத்துக்காக வேலை செய்ய ஆரம்பித்தார். அந்த நேரத்தில் மான்செஸ்டர் 'கொட்டன் பொலிஸ்' என்று அழைக்கப்பட்டது.

மான்செஸ்டரே ஏங்கெல்ஸின் இரண்டாவது சொந்த நகரம் ஆக மாறியது.அவர் அங்கு 20 வருடங்களுக்கும் கூடுதலான காலம் வாழ்ந்தார்.மார்க்ஸும் ஏங்கெல்ஸும் தங்களுக்கிடையிலான நட்புறவை மான்செஸ்டரிரில் வலுப்படுத்திக் கொண்டு வரலாற்றுப் போக்கை மாற்றிய புரட்சிகரமான கோட்பாடுகளை வளர்த்தெடுக்க ஆரம்பித்தார்கள்.

தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளையும் முதலாளித்துவவாதிகளின் சுரண்டலையும் மிகவும் கருத்தூன்றி அவதானித்த ஏங்கெல்ஸ், மார்க்சிய கோட்பாட்டுக்கு கணிசமானளவுக்கு பங்களிப்புச் செய்தார். மார்க்ஸும் அவரும் சேர்ந்து கம்யூனிஸ்ட் பிரகடனத்தை தயாரித்ததுடன் தொழிலாளர் வர்க்கத்தின் விதியை மாற்றுவதற்காக உலகின் முதலாவது பாட்டாளி வர்க்க கட்சியையும் கூட்டாக ஆரம்பித்தனர்.

மார்க்ஸின் மறைவுக்குப் பிறகு ஏங்கெல்ஸ் சர்வதேசிய தொழிலாளர் இயக்கத்தின் தலைமைத்துவத்தையும் அதை வழிநடத்தும் பொறுப்பையும் தனது தோள்களில் சுமந்தார். டாஸ் கப்பிடெல் (மூலதனம் ) உட்பட மார்க்ஸ் நிறைவு செய்யாத படைப்புகளை தெரிந்தெடுத்து ஏங்கெல்ஸ் பிரசுரித்த அதேவேளை, மார்க்சிய கோட்பாட்டை பாதுகாத்து வளர்த்தெடுக்கும் பணிகளையும் தொடர்ந்தார்.


Add new comment

Or log in with...