செல்ல நாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு சிறு காயம் | தினகரன்

செல்ல நாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு சிறு காயம்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும் ஜோ பைடன் தனது செல்ல நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது காலில் முறிவு ஏற்பட்டிருப்பதாக அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தனது ஜெர்மன் செப்பர்ட் நாய்களில் ஒன்றுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது கடந்த சனிக்கிழமை 78 வயதான பைடனின் கணுக்கால் பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளது.

எக்ஸ்ரே சோதனையில் அவருக்கு வெளிப்படையாக எந்த எலும்பு முறிவும் ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லை என்று அவரது தனிப்பட்ட மருத்துவர் கெவின் ஓகோனர் தெரிவித்துள்ளார். சி.டீ ஸ்கேன் சோதனையில் மேலும் விபரம் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் சில வாரங்களுக்குச் சிறப்புக் காலணியை அணிய வேண்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அது வயதானவர்களுக்கு வழக்கமாக ஏற்படும் இலேசான எலும்பு முறிவே என்று மருத்துவர்கள் கூறினர்.

ஜனவரியில் பதவியேற்கும்போது அமெரிக்காவின் மிக வயதான ஜனாதிபதி என்ற பெருமையை பைடன் பெறுவார்.


Add new comment

Or log in with...