மஹர சிறை அமைதியின்மை; மரணித்த கைதிகள் 11 ஆக உயர்வு | தினகரன்

மஹர சிறை அமைதியின்மை; மரணித்த கைதிகள் 11 ஆக உயர்வு

மஹர சிறை அமைதியின்மை; மரணித்த கைதிகள் 11 ஆக உயர்வு-Mahara Prison Shooting-Death Toll Increased Up to 11

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவத்தில் மேலும் 2 கைதிகள் மரணமடைந்துள்ளனர்.

காயமடைந்து (கொழும்பு வடக்கு) ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கைதிகள் இருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த அமைதியின்மை சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட நடவடிக்கையில் மரணமடைந்த கைதிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது.

காயமடைந்த 107 பேரில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்றையதினம் (30) அறிவிக்கப்பட்டிருந்ததோடு, அவர்களில் 38 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...