- டிசம்பர் நடுப்பகுதியில் செயற்பாடுகள் ஆரம்பம்
- 3,000 இற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள்
- 250 மில். அமெ. டொலர் பெறுமதியான டயர் உற்பத்தி நிலையம்
- ஏற்றுமதிக்கும் பெரும் உந்துதல்
அமெரிக்க டொலர் 250 மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்டுள்ள Rigid Tyre Corporation (Pvt) Ltd டிசம்பர் அங்குரார்ப்பணம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஹொரணை, வகவத்தை பகுதியில் உள்ள முதலீட்டுச் சபையின் ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி நிலையமான இந்தப் பாரிய அபிவிருத்தித் திட்டத்தை கௌரவ கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
மைல்கல்லாக அமையும் இத்திட்டம் இலங்கையில் அமையப்பெறும் முதலாவதும், ஒன்றே ஒன்றானதாகும். அது மட்டுமன்றி எஸ்யூவி, இரு சக்கர வண்டிகள், முச்சக்கர வண்டிகள், ட்ரக்ஸ், பஸ்கள் போன்ற வாகன வகைகள் மற்றும் பயணிகள் கார்களுக்கான டயர்களை உள்ளூர் கைவினைத்திறனை அதிநவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் இணைக்கும் வகையில் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் காணப்படக்கூடிய மிகப்பெரிய வசதியாகவும் இது அமையும்.
ஈர்க்கக்கூடிய உற்பத்தித்திறனைக் கொண்ட இந்த ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியாலை, உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள சூழலில் உள்ளூர் நாணயத்தை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை வலுப்படுத்தி, ஏற்றுமதிக்குப் புத்துயிர் அளிப்பதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி நடுப்பகுதியில் நடவடிக்கைகள் தொடங்கியவுடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிலான முதற்கட்டத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருப்பதுடன், இரண்டாவது கட்டம் 2020 மார்ச் நடுப்பகுதியில் நிறைவடையும்.
இந்தத் திட்டம் பற்றி விபரித்த நிறைவேற்றுப் பணிப்பார் தம்மிக்க லொக்குவிதான குறிப்பிடுகையில், " Rigid Tyre Corporation கடந்த பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீடு ஆகும்; உற்பத்தி தொடங்கும் போது இது நாட்டின் முன்னணி ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகத் திகழும். கடந்த சில ஆண்டுகளில் வெவ்வேறு நெருக்கடிகளால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளமை ஒருபுறம் இருக்க, இலங்கை ஒரு காலத்தில் உலகப் புகழ் பெற்ற உள்ளூர் ரப்பர் தொழிற்துறை என்பதைப் புதுப்பித்து ஏற்றுமதியை ஊக்குவிக்க இத்திட்டம் உதவும்” என்றார்.
Rigid Tyre Corporation தலைவர் நந்தன லொக்குவிதான தெரிவிக்கையில், தேவையான அனைத்து ரப்பர்களையும் உள்நாட்டின் மூலமாக வழங்க உத்தேசித்துள்ளோம், இது சொந்த ரப்பர் விவசாயிக்கு அதிகாரம் அளிப்பதுடன் ஆயிரக்கணக்கானோருக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். மிக முக்கியமாக செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் சந்தையில் நிகரற்ற முன்னோடியாக இருக்கும் ஐரோப்பிய தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துவதன் மூலம் நாடு பயனடையும்" என்றார்.
இலங்கையில் இந்த அளவு முதலீடு செய்யப்படுவதன் ஊடாக சரியானது பின்பற்றப்படுகிறது என்பதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் புரிந்துகொள்வதற்கான செய்தியை அனுப்பக்கூடும் என்று தலைவர் குறிப்பிட்டார். "இது போன்ற முதலீடுகள் ஒரு நல்ல முன்னுதாரணத்தை அமைத்து, இலங்கை உலகளவில் முதலீட்டாளர்களுக்குப் புகலிடமாக உள்ளது என்ற நிலையை உறுதிப்படுத்துகின்றது. எதிர்வரும் காலங்களில் நாட்டை ஒரு தொழில்துறை மையமாக நிலைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப இது மிகவும் பொருந்துகிறது" என்றார்.
சுற்றுச்சூழல் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தி நவீன நுட்பங்களை உள்ளடக்கிய இந்த முழுமையான ஒருங்கிணைந்த வசதிக்கான அத்திவாரம் 2017 ஜனவரி 5 ஆம் திகதி இடப்பட்டது.
நந்தன லொகுவிதான இரும்பு புனையல் உள்ளிட்ட பரந்துபட்ட உலகின் முன்னணி நிறுவனமான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள Onyx Group இற்குத் தலைமைத்துவம் வழங்கும் புகழ்பெற்ற தொழில் முனைவராக திகழ்கிறார். டுபாயில் உள்ள ஆயசசழைவ யுட துயனயக ஹோட்டலின் உரிமையாளரான இவர், 2021 மே மாதம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ள மிரிச்சவிலவில சீமெந்து அரைக்கும் ஆலையான Marangoni Industrial Tyres Lanka (Pvt) Ltd நிறுவனத்தையும் உரிமையாகக் கொண்டுள்ளார்.
Add new comment