சுதர்ஷனி பெனாண்டோபுள்ளேவின் அமைச்சு பதவியில் மாற்றம்

சுதர்ஷனி பெனாண்டோபுள்ளேவின் அமைச்சு பதவியில் மாற்றம்-Sutharshini Fernandopulle Sworn In As Primary Health Services-COVID Prevention State Minister

சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சிலிருந்து ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சராக நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க  அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே, இதற்கு முன்பு சிறைச்சாலைகள்‌ மறுசீரமைப்பு மற்றும்‌ சிறைக்கைதிகள்‌ புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய இராஜாங்க அமைச்சர் இன்று (30) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

சுதர்ஷனி பெனாண்டோபுள்ளேவின் அமைச்சு பதவியில் மாற்றம்-Sutharshini Fernandopulle Sworn In As Primary Health Services-COVID Prevention State Minister

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கை இராஜாங்க அமைச்சு ஆனது, புதிய இராஜாங்க அமைச்சாகும்.

ஆரம்ப சுகாதார சேவைகளை மிக உயர்ந்த தரத்திற்கு மேம்படுத்தி பராமரிப்பது 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மக்களுக்காக, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு உயர் மட்ட சுகாதார சேவையை உறுதி செய்வதற்கு ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதும் விரிவாக்குவதும் அவசியம் என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

கொவிட்-19 நோய் பரவலுடன் அனைத்து தொற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பை ஏலவே கண்டறிந்து கட்டுப்படுத்தும் நோக்கிலான கொள்கை மற்றும் நடைமுறை சார்ந்த பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

இப்புதிய இராஜாங்க அமைச்சு இந்நோக்கத்தை அடைந்துகொள்வதற்காகவே உருவாக்கப்பட்டது.


Add new comment

Or log in with...