நாளை முதல் ஒரு சில தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்!

நாளை முதல் ஒரு சில தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்-Low Pressure In South-East Bay of Bengal-Concentrated Into-Depression-Warning to Naval Communities

- மறு அறிவித்தல் வரை எச்சரிக்கை
- தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்

நாளை (01) முதல் காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடலுக்கு செல்ல வேண்டாமென மீனவர்கள் உள்ளிட்ட கடலில் பயணிக்கும் சமூகத்தினருக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், இவ்வறிவித்தலை விடுப்பதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு கிழக்காகஉள்ள கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான கடற்பரப்புகளில் (05N –12N, 85E –95E)கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறுஅறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தால் அடுத்த சில நாட்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

இத்தொகுதியானது மேற்கு திசையில் இலங்கையின்வடக்கு கரையைநோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அதுஅடுத்த சில நாட்களுக்கு நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் வானிலையில் தாக்கம் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இடைக்கிடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 50மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
 

PDF File: 

Add new comment

Or log in with...