மத்திய மாகாணத்தில் இதுவரை 397 தொற்றாளர்கள் அடையாளம்

மத்திய மாகாணத்தில் இதுவரை 397 தொற்றாளர்கள் அடையாளம்-397 More COVID19 Cases Found in Central Province So Far

மத்திய மாகாணத்தில் கொரோனா நோய்த் தொற்றாளர்களின்  எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளதாக, மத்திய மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலிருந்தே அதிக எண்ணிக்கையிலான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த வகையில் கண்டி மாவட்டத்தில் 230 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதுபோன்று   நுவரரெலியா மாவட்டத்தில் இருந்து 118 தொற்றாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 49 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் இன்றையதினம் மேல் மாகாணத்தில் 14 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் சுகாதார அலுவலர் பிரிவுகளில் அக்குரணையிலிருந்து இதுவரை அதிக அளவிலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு  71 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  கண்டி நகர சுகாதார அலுவலர் பிரிவில் இருந்து 23 தொற்றாளர்களும், பாத்ததும்பறை  சுகாதார அலுவலர் பிரிவில் இருந்து 16 தொற்றாளர்களும்  பதிவாகியுள்ளனர்.

நுவரெலியா  மாவட்டத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்களில் 38 பேர் அம்பகமுவ சுகாதார அலுவலர் பிரிவைச் சேர்ந்தவர்கள். மஸ்கெலியா சுகாதார அலுவலர் பிரிவில் இருந்து 26 தொற்றாளர்களும், பொகவந்தலாவ சுகாதார அலுவலர் பிரிவில் இருந்து 17  தொற்றாளர்களும்   பதிவாகியுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்களாக கலேவெல சுகாதார அலுவலர் பிரிவில் இருந்து பதிவாகியுள்ளனர். லக்கல  சுகாதார அலுவலர் பிரிவில் இருந்து 06  தொற்றாளர்களும், ரத்தோட்டை சுகாதார அலுவலர் பிரிவில் இருந்து 5 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதற்கிடையில், நேற்றுமுன்தினம் (27) வரை கண்டி மாவட்டத்தில் இயங்கும் கொவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 532 என, சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தெல்தெனிய  மாவட்ட  ஆஸ்பத்திரியில்  77 பேரும், குண்டசாலை பொலிஸ்  பயிற்சி கல்லூரியில் 29 பேரும், பொல்கொல்ல மகாவலி கல்வியியல் கல்லூரியில் 153 பேரும், பெனிதெனிய    ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 273 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றையதினம் (29) முற்பகல் 6.00 மணிக்கு 126 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இன்று 23 பேர்  குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியாகியுள்ளனர்.

(எம்.ஏ. அமீனுல்லா )


Add new comment

Or log in with...