தம்புள்ளை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு | தினகரன்

தம்புள்ளை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு

தம்புள்ளை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு-Dambulla Educational Zone Schools Closed for One Week

தம்புள்ளை கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை (30) திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை மாநகர சபைத் தலைவர் ஜாலிய ஓபாத இவ்வறிவ்வித்தலை விடுத்துள்ளார்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையதில் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தவிர, கலேவல - தலகிரியாகம மகா வித்தியாலயத்தையும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...