முஸ்லிம்களின் சடலங்கள் எரிப்பு விவகார வழக்கு

- விசாரணை 30 ஆம் திகதி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடையும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கக்கோரும் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை எதிர்வரும் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.

இத் தீர்மானம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்கக்கோரும் மனு மீதான விசாரணையே எதிர்வரும் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிபதிகள் குழாம் மேற்படி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ, காமினி அமரசேகர ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையிலேயே நேற்று மேற்படி

மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போதே மேற்படி தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் தரப்பினராலும் 12 அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...