கண்டியில் ஏற்பட்ட பூகம்பங்கள் விக்டோரியா நீர்த்தேக்கத்தை பாதிக்காது

புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி ஜகத் குணதிலக்க தெரிவிப்பு

கண்டி பல்லேகல பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பங்கள் விக்டோரியா நீர்த்தேக்கத்தை பாதிக்காது என்று பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி ஜகத் குணத்திலக்க கூறுகிறார்.

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தின் பல்லேகல பிரதேசத்திற்கு அருகாமையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட சிறிய பூகம்பங்களின் தாக்கத்தின் தன்மையை அறிவது தொடர்பாக நேற்று முன்தினம் (23) மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில், இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் குறித்த ஆய்வு அறிக்கை தொடர்பில் இவ்வாறு விளக்கமளித்தார்.

புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி ஜகத் குணதிலக்க மேலும் கூறுகையில் :

விக்டோரியா நீர்த்தேக்கம் ஆனது உலகின் மிக திறமையான வடிவமைப்பாளர்களால் கட்டப்பட்டது. அந்த பகுதியில் அதிகபட்ச நில அதிர்வு தீவிரம் பற்றி,கடந்த 100 ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற நிலநடுக்கங்களின் அளவைக் கருத்திற் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருந்த விசேட ஆய்வொன்றின் அடிப்படையில் அவ்வாறு நீர்த்தேக்கத்தை பாதிக்கும் பூகம்பமோ நில அதிர்வுகள் எதுவுமே இல்லை என்றும் அவர் கூறினார்.

இலங்கை தீவானது , பூகம்பங்கள் ஏற்படக்கூடிய பகுதியில் இல்லை என தெரிவிக்கும் சிரேஷ்ட பேராசிரியர் , சமீபத்தில் பல்லேகல அருகே ஏற்பட்டிருக்கும் நிகழ்வை பூகம்பங்கள் என மக்கள் கருதினாலும் அவை பூகம்பங்கள் அல்ல என்றும் கூறினார்.

இந்த நிலநடுக்கம் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத ஒரு சிறிய நில அதிர்வு என்று அவர் வலியுறுத்தினார்.

சுண்ணாம்பு தொடர்பான தொழில்கள் இந்த பிராந்தியத்தில் இடம்பெறுகின்றன.

இந்த பூகம்பங்களுடன் அவை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் மாற்றமாக பூகம்பமே இதற்குக் காரணம் என்று முடிவு செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார்.

சுண்ணாம்புக் கல் நாட்டுக்கு இன்றியமையாத வளமாக இருப்பதால், அதை, அதன் இடத்திலிருந்து மிகக் கவனமாக அகழ்ந்தெடுக்க வேண்டும். அதை முறையான தொழில்நுட்ப அறிவுடன் தோண்ட வேண்டும்.

விக்டோரியா நீர்த்தேக்கம் கட்டப்பட்ட பின்னர், நீர் அதன் அதிகபட்ச கொள்ளவை எட்டிய பல சம்பவங்கள் இருந்த போதிலும் கூட முந்தைய நான்கு பூகம்பங்களிலும் நீர்த்தேக்கம் அதன் அதிகபட்ச திறனை எட்டவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

பூகம்பம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் புவியியல் துறை, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு, புவியியல் மற்றும் சுரங்க பணியகம், பேராதனை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆய்வாளர்கள், கண்டி மாவட்ட அதிகாரிகள் என பலர் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

(எம்.ஏ. அமீனுல்லா)


Add new comment

Or log in with...