சீனாவில் மக்கள் தொகையை அதிகரிப்பதற்கு புதிய திட்டம் | தினகரன்

சீனாவில் மக்கள் தொகையை அதிகரிப்பதற்கு புதிய திட்டம்

துரிதமாக மூப்படையும் மக்கள் தொகையைக் கையாள சீனா புதிய வழிமுறைகளை திட்டமிட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, இளம் தம்பதிகள் அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விரிவான நிதி ஆதரவைச் சீனா வழங்கவுள்ளது. 1978ஆம் ஆண்டில் சீனா ‘ஒரு பிள்ளை போதும்’ என்ற சர்ச்சைக்குரிய கொள்கையை அறிமுகம் செய்தது.

துரிதமாகப் பெருகிய மக்கள் தொகை, பொருளாதார வளர்ச்சியை மட்டுப்படுத்துவதாகக் கருதப்பட்டதால் அத்தகைய கொள்கை உருவாக்கப்பட்டது.

ஆனால் 2016ஆம் ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இரண்டாவது பிள்ளையைப் பெற தம்பதிகள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவாக கடந்த ஆண்டு பத்தரை வீதம் குறைந்தது.

2025ஆம் ஆண்டுக்குள் 60 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் 300 மில்லியனுக்கு உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று தற்போதைய போக்கு நீடித்தால் வேலைக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை 2050இல் 200 மில்லியனாகக் குறைவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...