மருத்துவ பீட மாணவனின் மரணம் தொடர்பாக விசாரணை வேண்டும் | தினகரன்

மருத்துவ பீட மாணவனின் மரணம் தொடர்பாக விசாரணை வேண்டும்

ஜனாதிபதிக்கு சகோதரன் கடிதம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்ற னின் மரணத்தில் மிகுந்த சந்தேகம் இருப்பதனால் இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு தமக்கான நீதியை பெற்றுத் தருமாறு அவருடைய சகோதரன் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மாஅதிபர், இராணுவத் தளபதி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த 17. 11. 2020 அன்று கோப்பாய் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கி நின்ற நிலையில் மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் சடலமாக மீட்கப்பட்டார்.

பொலிசார் இம் மரணத்தினை தற்கொலை எனும் ரீதியில் விசாரணை மேற்கொண்டுள்ளமை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதனால் இவ்விடயத்தினை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பாரப்படுத்தி உரிய விசாரணைகளை மேற்கொண்டு தமக்கான நீதியை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கரவெட்டி தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...