கனடிய உயர் விருதை பெற்ற இலங்கைத் தமிழர் | தினகரன்

கனடிய உயர் விருதை பெற்ற இலங்கைத் தமிழர்

வாழ்த்தும் பாராட்டும் குவிகிறது

கனடிய பாதுகாப்புப் படையில் 22 ஆண்டுகள் நற்பணி ஆற்றியமைக்காக, கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையக முதுநிலை நிதியியல் நிர்வாகியும் ஈழத்தமிழரான மதியாபரணம் வாகீசன் கனடிய உயர் விருதை பெற்றுள்ளார். கடனாவின் உயர் மதிப்புறு விருதான  Canadian Forces' Decoration (CD) First Clasp விருது அவருக்கு வழங்கி பாராட்டு செய்யப்பட்டுள்ளது.

யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான மதியாபரணம் வாகீசன் (1988ம் ஆண்டு உயர்தரம்)அவர்களுக்கு கல்லூரிச் சமூகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த உயர்மதிப்பைப் பெற்றுக் கொண்ட முதல் ஈழத்தமிழ் கனடியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...