மோ. சைக்கிளில் சென்றவர் வாள்வெட்டில் பலி | தினகரன்

மோ. சைக்கிளில் சென்றவர் வாள்வெட்டில் பலி

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தம்பகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டுப்பகுதி வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மீது இனந்தெரியாதோரினால் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாள் வெட்டுக்கு இலக்கான  நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, பளை பொலிசார் தெரிவித்தனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான நபர், பளை பகுதியில் அமைந்துள்ள பழக்கடை ஒன்றில் பழங்கள் வாங்கி விட்டு, தம்பகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டு வீதியினூடாக மாமுனை நோக்கி பயணித்த வேளையில் குறித்த சம்பவத்திற்கு இலக்காகியுள்ளார்.

மாமுனை பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் குலசிங்கம் (40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கிளிநொச்சி குறூப் நிருபர் - முருகையா தமிழ்செல்வன், பரந்தன் குறூப் நிருபர் -  யது பாஸ்கரன், நாகர்கோவில் விசேட நிருபர் - ஜெகதீஸ் சிவம்)
 


Add new comment

Or log in with...