கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யச் சொன்ன ரசிகர் | தினகரன்

கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யச் சொன்ன ரசிகர்

நடிகை சமந்தா கொடுத்த பதில்

தமிழ் சினிமாவில் மாடல் துறையில் முதன்முதலாக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை சமந்தா.

பின் படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் படிப்படியாக உயர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

இங்கே வெற்றிகண்ட சமந்தா தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார் அங்கும் ஜெயித்துக் காட்டினார். பின் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதல் திருமணமும் செய்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் போட்டுள்ளார். அதில் ஒரு ரசிகர், நீங்கள் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்து என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.

அதற்கு சமந்தா, அதை செய்ய முடியாது. நீங்கள் கூறும் விஷயத்தை வேண்டுமானால் நாக சைத்தன்யாவை செய்ய சொல்லுங்கள் என நகைச்சுவையாக பதில் கொடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...